அ முதல் America வரை

தமிழ் [Tamizh]

Culture & Society, Diversity, and Science

ஒவ்வொரு ஆண்டும், பல்லாயிரக் கணக்கான இந்திய மாணவர்கள்-அவர்களில்- பல நூற்றுக்கணக்கான தமிழ் மாணவர்கள் தத்தம் கனவுகளை நனவாக்க கடல் கடந்து சாத்தியங்கலின் பெருநிலத்தை நோக்கிப் பயணிக்கிறார்கள். நமது ஊடகம்(ஓலியலை வரிசை) இந்தப் பயணிகளின் வெற்றிகளை, தோல்விகளை, அனுபவங்களை அதன்வழி கண்டடைந்த நல்லறிவை ஞானத்தை, பின்தொடர்ந்துவரும் இளைய தலைமுறை மாணவர்களுக்குக் கடத்தும் ஒரு வழி. இப்படித்தானே மனிதம் மொழியை அறிந்தது. மொழியின் வழியாக அறிவை குறித்துவைத்தது. சேர்த்த அறிவை பரப்பியது. இப்படித்தானே காடுகளில் ஒற்றையடிப் பாதைகள் உருவாயின. பின் அவை சாலைகளாயின. நல்லது. இதோ, இன்று இப்போது முதுகலை மாணவர்கள் கௌதம் ஷர்மா மற்றும் ஆதவன் சிபி ! அவர்களோடு அற்புதமான அணிவரிசையில் விருந்தினர்கள் பலர்-பல தளங்களில் கோலோச்சும் முன்னோடிகள்- உங்களோடு தங்கள் அனுபவங்களைப் பகிர்கிறார்கள்: எதைபற்றி ? உள்நுழைவு நேர்காணலை (வீசா) எதிர்கொள்வது எப்படி ? என்பதிலிருந்து வேலைவாய்ப்பை பெறுவதுவரை. தயாராகுங்கள்: சந்திப்போம், நம் அன்புள்ள சகோதர சகோதரிகளின் அன்புள்ள அமெரிக்கா !

Logo by Aadhavan Sibi Mathivanan.

Episodes

Pre-Graduation வேலைவாய்ப்புகள்

Recorded on 2019-11-02

அ முதல் அமெரிக்காவரை ! புதிதாக MS-முதுநிலை அறிவியல் படிக்க இந்த ஆண்டு அமெரிக்கா வரும் தமிழ் மாணவர்களுக்கான வழிகாட்டு நிகழ்ச்சி. இது மூன்றாவது அத்தியாயம். உங்களுக்காக உரையாடுகிறார்கள், MS-இரண்டாம் ஆண்டு மாணவர்கள் ஆதவன் சிபி மதிவாணன் மற்றும் பாலசுப்பிரமணியம் ஸ்ரீகாந்த் ! படிக்கும்போதே பகுதி நேரமாக வேலை செய்யலாமா ? பல்கலை வளாகத்திற்கு உள்ளேயே என்னென்ன வேலைவாய்ப்புகள் கிடைக்கும் ? படிப்புக்கு பாதிப்பு வரக்கூடாது ! வருமானமும் வரவேண்டும் ! அப்படி செய்கிற வேலை, வருங்காலத்தில் […]

Listen ->

முதல் சில நாட்கள்

Recorded on 2019-08-29

‘அ’ முதல் அமெரிக்காவரை வரிசையில் தங்கள் அனுபவங்களைப் பற்றி தொடர்ந்து உரையாடுகிறார்கள் கௌதம் ஷர்மா மற்றும் ஆதவன் சிபி. அமெரிக்கா வந்து இறங்கும் இந்திய மாணவர்கள், அதிலும் பெரும்பாலும் முதல்முறை வருகிறவர்கள், அன்றாட அமெரிக்க வாழ்க்கைமுறைக்கு அனுசரித்துப் போவதில் ஒரேவிதமான குழப்பங்களைத்தான் சந்திக்கிறார்கள். அது சாலையைக் கடப்பதாக இருக்கலாம்; நகரத்தில் பயணிப்பதாக இருக்கலாம்; அவை நம்நாட்டு நடைமுறைக்கு முற்றிலும் மாறுபட்டதாவே இருக்கிறது. இந்த தனிமையான காலகட்டத்தைக் கடந்து இது எனக்கு பழக்கமான ஊர் என்ற உணர்வு வருவதற்கு […]

Listen ->

Visa வில்லங்கம்

Recorded on 2019-07-12

முதல் மடல்: ‘அ’ முதல் அமெரிக்காவரை. முதலாவது ‘விசா வில்லங்கம்”. எப்படியெப்படி தப்பு பண்ணலாம் ? விசா பெறுவதில் எத்தனை எத்தனை வில்லங்கம், முட்டுச் சந்து, உதவிக் கரங்கள், எளிமையான தீர்வுகள் ? உரையாடுகிறார்கள் கௌதம் ஷர்மா-ஆதவன் சிபி ! விசா வழிகாட்டும் வாட்சாப் குழுக்கள், தூதரகம் முன் நிற்கும் அனகோண்டா க்யூ வரிசை, ஒற்றை மனிதனாக கண்டம்விட்டு கண்டம் தாவி அமெரிக்கா சென்று சேரும் கொடுமையான முதல் அனுபவம் … எங்களில் எவரும் நண்பர்கள், முகம் […]

Listen ->

Pre-Graduation உள்ளிருப்புப் பயிற்சி

அ முதல் அமெரிக்காவரை ! புதிதாக MS-முதுநிலை அறிவியல் படிக்க இந்த ஆண்டு அமெரிக்கா வரும் தமிழ் மாணவர்களுக்கான வழிகாட்டு நிகழ்ச்சி. இது நான்காவது பாகம். மூன்றாவது பாகத்தைத் தொடர்ந்து உங்களுக்காக உரையாடுகிறார்கள், MS-இரண்டாம் ஆண்டு மாணவர்கள் ஆதவன் சிபி மதிவாணன் மற்றும் பாலசுப்பிரமணியம் ஸ்ரீகாந்த் ! குறிப்பாக இந்த உரையாடல் Pre graduation Curricular Practical Training எனப்படும் பட்டப் படிப்புக்கு ஊடாக மேற்கொள்ளும் ‘கல்வித்திட்ட செய்முறைப் பயிற்சி’ பற்றியது. CPT-க்கான பல்வகை வாய்ப்புகள், சில […]

Listen ->

Hosts